டெல்லி: 19710ம் ஆண்டின் போரின் கதாநாயகன் லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா, கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1971ம் ஆண்டு யுத்தத்தின் கடைசி நாளில், இந்திய ராணுவத்தின் மிகவும் பலம் வாய்ந்த படைப்பிரிவுகளில் தளபதியாக இருந்தவர் லெப்டினன்ட் கர்னல் ஆர்.எம். வோஹ்ரா. போரின் போது பாகிஸ்தான் படை பிரிவின் முக்கிய பகுதியை தீரத்துடன் அழிக்க முயன்றவர்.

அவரது டாங்கிகள் பசந்தர் ஆற்றைக் கடந்து பாகிஸ்தான் படைகளை அழிக்கும் முயற்சியை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. அவரின் வீரதீர செயலுக்காக அவருக்கு மகா வீர் சக்ரா வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டெல்லியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 88. புகழ்பெற்ற பதவிக்காலத்துக்கு பிறகு, வோஹ்ரா இந்தியாவின் இரண்டு உயரடுக்கு பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.