Skip to content
  • Wed. Sep 23rd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

லடாக் எல்லையில் இந்திய -சீன வீரர்கள் இடையே மோதல்! ராணுவ கர்னல் உள்பட 3 இந்தியவீரர்கள் வீரமரணம்

Jun 16, 2020

ஸ்ரீநகர்:

லடாக் எல்லையில் இந்திய -சீன வீரர்கள் இடையே மோதல்! ராணுவ கர்னல் உள்பட 3 இந்தியவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீன ராணுவத்தினர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.  நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட  2 வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்ததால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது.  கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன.

இதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில்,  உடன்பாடு எட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன. தொடர்ந்து படைப்பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலின்போது,  இந்திய  ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,  கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன துருப்புக்கள் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதில்,  ஒரு கர்னல் தர அதிகாரி மற்றும் இந்திய ராணுவத்தின் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் தோட்டாக்கள் எதுவும் சுடப்படவில்லை என்றும், கற்களைக்கொண்டே தாக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை…
1971ம் ஆண்டு போரின் ஹீரோ…! லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா கொரோனாவுக்கு பலி

Related Post

இந்தியா

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer