19/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா பாதிப்பு… 459 உயிரிழப்பு…

Must read

டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,106 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  459 பேர் தொற்று பாதிப்பு காரணமாக  உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி நேற்று  புதிதாக  மேலும் 11,919 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,89,623 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று மேலும் 459 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,65,082 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 12,789 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,97,921 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் 1,26,620 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1 நேற்று ஒரே நாளில் 72,94,864பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ,15,23,49,358 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 11,38,699 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 62,93,87,540* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

More articles

Latest article