சென்னை
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவி உள்ளது. இன்று மாவட்ட வாரியான ஒமிக்ரான் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 231 பேர் பாதிக்கப்படுள்ளனர். அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.
அதிகபட்சமாகச் சென்னையில் 144 பேர் பாதிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில்ல் 13 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்
மதுரை மாவட்டத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்
திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டு 6 பேரும் குணமடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்
கோவை , கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 4 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மாவட்டங்களில் தலா மூவர் பாதிக்கப்பட்டு மூவரும் குணம் அடைந்துள்ளனர்
நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் தலா இருவர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்
ஈரோடு, மயிலாடுதுறை, நகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.