பொதுமக்களுக்கு இலவசமாக  40 கோடி என் 95 முகக் கவசங்கள் வழங்க உள்ள அமெரிக்கா

Must read

வாஷிங்டன்

மெரிக்காவில் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக 40 கோடி என் 95 முகக கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

Sample pic

ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 6.6 கோடியைத் தாண்டி உள்ளது.  நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,702 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா  பரவ;லை தடுக்க முகக் கவசம் இன்றியமையாத ஒன்று என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.  இதையொட்டி அதிபர் ஜோ பைடன் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் கிடைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார். 

இதன் மூலம் சுமார் 40 கோடி என் 95 முக கவசங்கள் மருந்தகங்கள் மற்றும் பொதுச் சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.  வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்த முக கவசங்களை பொதுமக்கள் இலவசமாகப் பெறலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

More articles

Latest article