ராமேஸ்வரம்:

டந்த மாதம் 26ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை,எல்ல தாண்டியதாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதும், தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்துவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 7ந்தேதி ராமேஷ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியானர். அதைத்தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்த போராட்டம் காரணமாக மத்திய அரசு இலங்கையை கண்டித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள்  இன்று பிற்பகல் 4 மணியளவில் காரைக்கால் துறைமுகம் வந்தடைவர் என கூறப்படுகிறது.

இன்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்.  மாதம் 21 மற்றும் 26-ம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 38 பேரில்,  18 பேர் மட்டுமே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.