டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில்  மேலும் 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 68,000ஐ தாண்டி உள்ளது.

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த தொற்று தற்போது 13ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல, தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா வால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சத்தை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்ட உள்ளது. அதன்படி, நேற்று ஒரேநாளில், புதிதாக மேலும், 13,216 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,83,793 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும், 23 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 8,148 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,90,845 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.64% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 68,108 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.15% ஆக உள்ளது.

இந்தியாவில் . நேற்று ஒரே நாளில் 14,99,824 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,96,00,42,768 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது