சென்னை:

சென்னை, காஞ்சிபுரம் கலெக்டர் உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலராக நீண்ட காலம் இருந்த சபீதா தமிழக சிமெண்ட் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


புதிய பட்டியல்

* சுனில் பாலிவால், – உயர்கல்வித் துறை முதன்மை செயலர்

* காமராஜ், – பால் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர்

* உதயசந்திரன், – பள்ளி கல்வித் துறை செயலர்

* வள்ளலார், – சிறுபான்மை நலத்துறை இயக்குநர்

* தயானந்த், கட்டாரியா – போக்குவரத்து துறை ஆணையர்

* விக்ரம் கபூர் – எரிசக்தி துறை முதன்மை செயலர்

* அடூலியா மிஷ்ரா, – தொழில் துறை முதன்மை செயலர்

* பழனிக்குமார், – தமிழ்நாடு சுற்றுலா துறை மேலாண் இயக்குநர்

* நசிமுதீன், – சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்

* அன்புசெல்வன், – சென்னை மாவட்ட ஆட்சியர்

* கஜலெட்சுமி, – சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர்

* மகேஸ்வரி, – வணிக வரித்துறை இணை ஆணையர்

* பொன்னையா, – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

* சபிதா, – தமிழக சிமெண்ட் கழக மேலாண் இயக்குநர்

* வெங்கடேசன், – கனிம வளத்துறை மேலாண் இயக்குநர்

* சத்யபிரதா சாஹீ, – தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர்

* ஹர் சகாய் மீனா, – உப்பு கழக மேலாண் இயக்குநர்

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக ஒரே நாளில் அதிரடியாக 17 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.