சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில், 33 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில், அதிகபட்சமாக 6247 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக  தமிழக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், மேலுகூம்  33, 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  13 லட்சத்து 61 ஆயிரத்து 204 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலையில், தமிழகத்தில் , 2 லட்சத்து 19 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 6247 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதுவரை சென்னையில் 4,38,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும்  60 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை 5,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 3,85,297 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். தற்போது  47,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவையில் 3166 பேருக்கும் செங்கல்பட்டில் 2041 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1119 பேருக்கும் திருவள்ளூரில் 1835 பேருக்கும் திருச்சியில் 1569 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.