சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 8ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் இன்று தெரிவித்து உள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பேருந்து, ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தீபாவளி பண்டிகையை ஒட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என கூறிய அமைச்சர், கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 1800 425 6451 என்ற எண்ணை அழைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.