162 பேர் கைது: போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி தீவிரம்!

Must read

 
சென்னை:
மிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பலியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 162 போலி  டாக்டர்கள் செய்யப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
fake dr
கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பினால் 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது. இது டெங்கு காய்ச்சல் என்றும், மர்ம காய்ச்சல் என்றும் சொல்லி வருகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த  காய்ச்சல் காரணமாக  இறந்த 2 பேரும் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை  கண்டறிய சுகாதாரத்துறை மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், ஆயுஷ் மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றில் பதிவு இல்லாதவர்கள், முறையாக மருத்துவம் படிக்காதவர்கள் போலி மருத்துவர்களாக கருதப்படுவார்கள்
2013ம் ஆண்டு வரை இந்த கவுன்சில்களில் பதியாத போலி மருத்துவர்கள் 618 பேரை கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது இறப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் போலி மருத்துவர்களை கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போலி மருத்துவர்கள், சிறையிலிருந்து வெளியில் வந்ததும் மீண்டும் அதே தொழிலை , இடம் மாற்றி  கிராம பகுதிகளில் சென்று மருத்துவம் பார்க்கின்றனர். இவர்களைக் கண்காணிக்க புதிய திட்டம் நடைமுறைபடுத்த இருப்பதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
2014ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆகஸ்ட் மாதம் வரை 162 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 13, காஞ்சிபுரத்தில் 3, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை தொடர் உள்ளனர். சென்னையில் மிக அதிகளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை தீவிர வேட்டையாட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ப்பட்டுள்ளதாக தெரிகிறது.

More articles

Latest article