டில்லி

த்தீஸ்கர் மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 கோடிக்கும்  மேற்பட்ட வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.   சுமார் 52% பேருக்கு வேலை இல்லா நிலை உள்ளது.  கொரோனா கால கட்டத்தில் வேலை இன்மை மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது.  இதையொட்டி 100 நாட்கள் கட்டாய வேலைத் திட்டம் எனக் கூறப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 15 கோடி பணிகள் அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியது.

2020-21 ஆம் வருடம் இந்த திட்டத்தின் கீழ் அதிக அளவில் சத்தீஸ்கர் மாவட்டத்தில் பணி வழங்கப்பட்டுள்ளன.  அதன்படி 16,06,84,000 பேர் பயன் அடைந்துள்ளனர்.  இது மத்திய அரசு அறிவித்துள்ள 15 கோடி பணிகளை விடவும் அதிகமாகும்.,   இதுவரை இந்த அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலம் 107% அதிக பணிகள் அளித்துள்ளது.

இந்த வருடம் முடிய இன்னும் இரு வாரங்கள் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக 105% பணிகளை அளித்து மேற்கு வங்க மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  மூன்றாம் இடத்தில் அசாம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களில் 104% பணிகள் அளிக்கப்பட்டுள்ளன.  அடுத்த இடத்தில் ஒரிசா மாநிலத்தில் 103% பணிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் தமிழகம் 15 ஆம் இடத்தில் உள்ளது.