சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 224 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,11,256 பேர் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 528 பேர் குணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11,817 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று மட்டும் புதியதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் ஒட்டுமொத்தமாக, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழக்க பலியானவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்தது. 15,413 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.