திருவனந்தபுரம் :
கேரளாவில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் வரும் 1,500 பள்ளிக்கூடங்களை மூட கேரள அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா முழுவதும் அரசு அங்கீகாரம் பெறாமல் ஆயிரக்கணக்கில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படு கிறது. இதுகுறித்து மாநில சட்டமன்றத்தில், முஸ்லிம் லீக் கட்சி, எம்.எல்.ஏ., காதர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கேரள முதல்வர் பிரனாயி விஜயன், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டு உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாத பள்ளிகள் மீது, மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 2013ம் ஆண்டில், இதுவரை அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, 1194 பள்ளிகள் விண்ணப்பித்தன. அதை ஆய்வு செய்து, 395 பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கூறினார்.
இதற்கிடையில், சில பள்ளிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், மேலும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்யாத, அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 1,500 பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.