டில்லி:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீர் உடலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடடினயாக டில்லி அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்லா அருகே சராபரா பகுதியில் பிரியங்கா வதேரா தம்பதியினர் சொகுசு பங்களா கட்டி வருகின்றனர். இந்த வீட்டை பார்வையிட சோனியா காந்தி நேற்று சிம்லா சென்றார். அங்குள்ள சொகுசு ஒட்டலில் தங்கியிருந்த அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு சிகிச்சைப் பெற்றார். அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இன்று காலை சண்டிகரில் இருந்து விமானம் மூலம் டில்லி அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது அவரது உடல்நிலை நலமுடன் இயல்பான நிலையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சிம்லாவில் நிலவும் கடுங்குளிர் மற்றும் தொடர் மலை காரணமாக, சோனியா காந்திக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட தாகவும், இதன் காரணமாக அவர் மூச்சு விட சிரமப்பட்டதால், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடடினயாக டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சிம்லா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.