பசுவுக்கு ‘சவ ஊர்வலம்’’ நடத்திய 150 பேர் மீது  போலீஸ் வழக்கு..

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பக்கமுள்ள மெம்தி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதமாகப் பசு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
ஊரடங்கில் மனிதர்களுக்கே உணவு கிடைக்காத நிலையில், அந்த பசுவை வளர்த்தவர், அதனை வீட்டை விட்டு விரட்டி இருக்க வேண்டும்.
அங்குள்ள மளிகைக் கடைதான், பசுவின் இருப்பிடமாக மாறிப்போனது.
சில நாட்களுக்கு முன், அந்த பசு இறந்து விட்டது.
மளிகைக் கடை உரிமையாளர் தினேஷ் உள்ளிட்ட சிலர், அந்த பசுவை ‘நல்லடக்கம்’’ செய்துள்ளனர்.
அப்போது, பசுவின் உடலை, அவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். பசு ’’சவ’’ ஊர்வலத்தில் சில நூறு பேர் பங்கேற்றுள்ளனர்.
இதனை யாரோ வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட, வைரலானது, அந்த ஊர்வலம்.
அலிகார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து, அந்த காவல்நிலைய போலீசார், ஊரடங்கு விதிகளை மீறி, பசுவுக்குப் பாடை கட்டி ஊர்வலம் நடத்திய 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்
‘’கோமாதா எங்கள் குலமாதா’’ எனப் பூஜிக்கும் பா.ஜ.க.ஆட்சி நடக்கும் மாநிலத்தில் தான் இந்த வழக்குப்பதிவு சம்பவம்.
– ஏழுமலை வெங்கடேசன்