டெல்லி: 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை மார்ச் மாதத்திற்கு பிறகு  இயக்க முடியாது, அதன் பதிவுகள் புதுப்பிக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார்.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 15ஆண்டுகள் முடிவடைந்த வாகனங்கள் இனிமேல் புதுப்பிக்க முடியாது என்றும்,  இந்த புதிய விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் பழமையான அனைத்து அரசு வாகனங்களும் ரத்து செய்யப்படும் என்றும், இது தொடர்பான கொள்கை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும்,  சாலைகளில் ஓடும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களைத் தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  பேருந்துகள், டிரக் அல்லது கார்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் வாகனங்கள் இந்த விதிக்குள் அடங்கும் என்றவர், பழைய வாகனங்கள் அனைத்தும் தெருக்களில் இருந்து அகற்றப்படும் என்றார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் வாகன ஸ்கிராப் கொள்கையின்படி (VEHICLE SCRAPPAGE POLICY) அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் பொருத்தமற்ற வாகனங்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக நவீன மற்றும் புதிய வாகனங்களை சாலைகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வந்தது.  இந்த கொள்கை ஏப்ரல் 2023 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதுமு.

முன்னதாக,  வாகனக் கழிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தேசிய தலைநகரில் இயக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2014 இல் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. 15 ஆண்டு களுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே  மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கடந்த  ஆண்டு தொடக்கத்தில் ‘ வாகனங்களின் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  கார்களின் பின் இருக்கை உட்பட அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் அணியும் முக்கியமான திட்டத்தை கொண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.