குவைத்:

குவைத் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் சென்ற பஸ் எதிரில் வந்த மற்றொரு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 7 இந்தியர்கள், 5 எகிப்தியர்கள், 3 பாகிஸ்தானியர்கள் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இரு இந்தியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்