ஓட்டவா:

கனடா நாட்டை சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கணை ஷீரா ஸமால். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்ற அவர் பிறந்து 8 வாரம் ஆகியுள்ள தனது குழந்தையையும் உடன் தூக்கிச் சென்றார்.

போட்டியின் இடைவேளையின் போது தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சென்றார். அப்போது தாய்ப்பால் உறிஞ்சி எடுப்பதற்கு உதவும் பம்பை அவர் எடுத்து வர மறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் அறையில் தனது மார்பில் இருந்து நேரடியாக தாய்ப்பால் கொடுத்தார். இந்த புகைப்படத்தை அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.

இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 8 மாத குழந்தையை பெற்றேடுத்த ஷீரா ஸ்மால் ஒரு ஆசிரியை. உலகளவில் எந்த சூழ்நிலையிலும் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.