பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுகல்லில் நேற்று கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி வீடு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்து குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்பட்டுள்ளது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை…