தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 543, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 75 மற்றும் காஞ்சிபுரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 181, கன்னியாகுமரி 62, திருச்சி மற்றும் விருதுநகரில் தலா 36 பேருக்கும், திருநெல்வேலி 31, தூத்துக்குடி 30, ராணிப்பேட்டை 27, சேலம் 19, நீலகிரி 17, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் 12 பேருக்கும், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 10 பேருக்கும்

ஈரோடு 8, தென்காசி மற்றும் திருப்பூரில் தலா 7 பேருக்கும், வேலூரில் 6 பேருக்கும், கடலூர், திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 பேருக்கும்,

கரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் தலா 4 பேருக்கும், அரியலூர் மற்றும் மயிலாடுதுறையில் தலா 3 பேருக்கும், பெரம்பலூர், தேனி மற்றும் திருவண்ணாமலையில் தலா 2 பேருக்கும்

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 24,739 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 746 ஆண்கள் 715 பெண்கள் என மொத்தம் 1,461 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

697 பேர் இன்று குணமடைந்த நிலையில் 8222 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.