புனே:

காராஷ்டிர மாந்லம் புனேயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தததில், இடிபாடுகளில் சிக்கி 14 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

புனேவின்  உள்ள கொந்த்வா என்ற பகுதியில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றின் சுற்றுச் சுவர் அருகே ஏராளமானோர் குடிசைகள் அமைத்து குடியிருந்து வந்தனர். பலரது கார்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

தற்போது அங்கு மழை பெய்து வருவதால்,  சுமார் 60 அடி நீளமுள்ள அந்த குடியிருப்பின்  சுற்றுச்சுவர்  இன்று காலை  திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் குடிசைகளில் இருந்தவர்கள் சிக்கினர். மற்றும் பல கார்களும் சேதமடைந்தன.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த திடீர் விபத்தில் குடிசையில் வசித்து வந்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர் கள் என்பது தெரிய வந்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய உதவிகளை வழங்கும் என்றும் புனே  கலெக்டர் தெரிவித்து உள்ளார்.