ண்டன்

ண்டன் பிரதமர் 1919ல் ஜாலியன்வாலா பாக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பிரிட்டன் எம்பிக்கள் கூறி உள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல இந்தியர்கள் தாக்கப்பட்டதும் பலர் கொல்லப்பட்டதும் வழக்கமான நிகழ்வாக இருந்தது.  கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அன்று பஞ்சாபில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்னும் இடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.   நான்கு புறமும் உயரமான மதில் சுவர் கொண்ட இந்த மைதானத்தில் ஒரே ஒரு குறுகிய வழி மட்டுமே உண்டு

பிரிட்டன் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்பவன் ஆங்கில மற்றும் இந்திய வீரர்களைக் கொண்டு திடீரென கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான்.  இதனால் பலரும் உயிரிழந்தனர்.  கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.   இந்த நிகழ்வு அக்காலத்தில் உலக நாடுகளிடையே கடும் பரபரப்பை உண்டாக்கியது.

அந்த நிகழ்வுக்கு பிரிட்டன் அரசும் அதன் பிரதமர் தெரிசா மே ஆகியோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மனு இந்திய வம்சாவளியினரன வீரேந்திர சர்மா என்னும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரல் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த மனுவில் பிரிட்டனை சேர்ந்த 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.