டெல்லி: வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதற்காக வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விமானங்களை இயக்கி வருகிறது. 6வது கட்டமாக, அக்டோபர் 24ம் தேதி வரை விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந் நிலையில் வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: செப்டம்பர் 16ம் தேதி வரை 21 நாடுகளில் இருந்து 14.6 லட்சம் பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். 22 விமானங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன. இம்மாதம் இறுதி வரை, இந்தியர்கள் அழைத்து வரப்பட இருக்கின்றனர். இன்னும் 1,20,000 பேர் அழைத்து வரப்பட உள்ளனர் என்று கூறினார்.