சென்னை: தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவரும் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 935 பேர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 23,83,721 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21,74,247 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை 29,547 பேர் உயிர் இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில், 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தலைநகர் சென்னையில் நேற்று 935 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 5,25,009 ஆக அதிகரித்துள்ளது. 27 பேர் உயிர் இழந்துள்ளார். 1,589 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 7,826 பேர் மரணம் அடைந்துள்ளனர். 5,08,043 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 9,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு