பீஜிங்

சீன நாட்டு முன்னாள் அதிகாரி ஊழலில் சேர்த்த 13 டன் தங்கம் மற்றும் 2.34 லட்சம் கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் சீனாவில் ஊழல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.   அதிகபட்சமாக ஊழலுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.   ஆயினும் இங்கு ஊழல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.  இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்ட அதிகாரிகளும் உள்ளனர்.   தற்போதைய சீன அதிபர் ஜி ஜின் பிங் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவியில் இருந்தவர் ஜாங் குயின் (வயது 58) டான்ஜோவின் நகர முன்னாள் மேயர் ஆவார் .     ஜாங் குயின் மீது ஏராளமான ஊழல் புகார் எழுந்தது.    அதையொட்டி அவரது வீட்டில் சீனா காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரது வீட்டின் ரகசிய பாதாள அறையை திறந்து சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ந்தனர்   அங்கு மலைபோல் தங்கக்கட்டிகள் இருந்தன. அத்துடன் சீன பணம் கட்டுக்கட்டாக இருந்தன.

இந்த  தங்கத்தை எடை போடச் சாதாரண தராசுகள் போதாது என்பதால், லாரி புக்கிங் அலுவலகங்களில் மூட்டைகளை எடை போடப் பயன்படும் பெரிய எடை மேடைகளை கொண்டு சோதனையிட்டனர். அப்போது   மொத்தம் 13 டன் தங்கம் அங்கு இருந்தது தெரியவந்தது. அது மட்டுமின்றி  சீன பணம், இந்திய மதிப்பில் 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி அளவுக்குக் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பறிமுதல் குறித்து மேலிடத்துக்கு அதிகாரிகள் தகவல் அளித்தபோது, அமைச்சர்களும், அதிபரும் அதிர்ந்து விட்டனர். சீன வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் ஊழலில் சேர்க்கப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை  ஆகும்.

சீன அரசு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டதையடுத்து காவல்துறையினர்  ஜாங் குயின்னை கைது செய்துள்ளனர்.

சீனாவின் ஜாங் மாகாண தலைநகரான ஹைனானின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளராக ஜாங் குயின் இருந்தார்,  சீன  நாட்டு அதிகாரிகளின் தரவரிசைப்படி, ஜாங் குயின்னின் பதவி மேயருக்கு சமமானதாக இருந்தது. அத்துடன் அவர் ஹைனான் மாகாணத்தின் நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

மிகப் பெரிய அளவில் ஜாங் குயின் ஊழல் செய்து சொத்து சேகரித்திருப்பதால், அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் எனப் பேசப்படுகிறது.