ஆந்திராவில் ஏரியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி

Must read

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் குண்டக்கால் மண்டல் பகுதியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் ஏரியில் படகு மூலம் சென்றனர். இதில் பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது . இதில் 13 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.

 

தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்களை தேடினர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் நீச்சல் தெரிந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேடுதல் பணி நாளை நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். படகு விபத்திற்கு காரணம் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றியதே என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கியவர்களில் 4 பெண்கள், 2 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

More articles

Latest article