டெல்லி:

கல்லூரிகளில் அரசு கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் வழங்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்கலைகழக மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பல வகை உதவித் தொகைகளை பெற்று வருகின்றனர். தற்போது இதை பெறுவதற்கான பதிவு நடைபெற்று வருகிறது.

கல்வி உதவித் தொகை பெற ஆதார் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் எண் பெறாதவர்கள் வரும் ஜூன் இறுதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை, அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.