பெங்களூரு:

ர்நாடகாவில், குமாரசாமி ஆட்சிக்கு எதிராக 13 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளதால், குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கார்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெற 113 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.

கர்நாடக சட்டமன்றத்தல் பாரதியஜனதா கட்சிக்கு  105 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்க 78 எம்எல்ஏக்களும்,  ஜனதா தளம் கட்சிக்கு  37 எம்எல்ஏக்களும் என மொத்தம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர்.  இதன் காரணமாக அங்கு காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து 13  எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாது. தற்போது கர்நாடக முதல்வர்  அமெரிக்காவில் உள்ளார். அவர்  திங்கட்கிழமை அன்று  இந்தியா  திரும்புகிறார். அதன் பிறகே ஆட்சியின் முடிவு தெரிய வரும்.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இரு கட்சிகளிலும் சில எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம் கேட்டு தங்கள் கட்சித் தலைமையை படுத்தி வருகிறார்கள்.  ஏற்கனவே 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட  நிலையில், கடந்த வாரம் காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்க்கிஹோலி ஆகியோர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் நெருக்கடியில் உள்ள குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மேலும் 13 பேர் ராஜினாமா எண்ணத்துடன் சபாநாயகரிடமும், ஆளுநரிடமும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இதற்கி  ஜேடிஎஸ் – காங்கிரஸ் எம்எல்ஏக்களை உருட்டி மிரட்டி பிளாக்மெயில் செய்து ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். பாஜகதான் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக முதல்வர் குமாரசாமியும் கூறியுள்ளார்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் குமாரசாமி யின் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழக்கும். எனவே எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழக்கூடும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதனிடையே கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், “எம்எல்ஏக்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை” என்று  தெரிவித்து உள்ளார்.  துணை முதல்வர் பரமேஷ்வரா உடன் இணைந்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். அதிருப்தி  எம்எல்ஏக்களை அழைத்து சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் உடனே பெங்களூரு வருமாறு மாநில  மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.