evks
தமிழகத்தை ஆளும் அதிமுகவை வீழ்த்துவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் திமுக இடையே முதன் முதலாக கூட்டணி உருவானது. இதையடுத்து ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், புதிதாக இணைந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்படி ஏற்கெனவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த பேரவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்த மனித நேய மக்கள் கட்சி தற்போது திமுக கூட்டணிக்கு வந்துள்ளது. அந்த கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், என்.ஆர்.தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஓர் இடமும், பொன்குமார் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சிக்கு ஓர் இடமும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகாமி தலைமையிலான சமூக சமத்துவ படை கட்சிக்கு ஓர் இடமும் வழங்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டணியில் 13 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது.