சென்னை:

மிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 126 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும, 225 முதுநிலை படிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்து உள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. தொடக்கத்தில்  600க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், பொறியியல் படிப்பின் மீதான மவுசு குறைந்து விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை இன்றி ஏராளமான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பல பொறியியல் கல்லூரிகள் ஆர்ட்ஸ் கல்லூரிகளாக மாற்றப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவது உள்ள பொறியியல் கல்லூரிகளில் 800 கல்லுரிகளை  மூட முடிவு செய்துள்ளதாக ஏஐசிடிஇ கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 126 பொறியியல் கல்லூரிகளும், முதுநிலை படிப்பில் 225 படிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்து உள்ளது.

மூடப்பட்டுள்ள 126 பொறியியல் கல்லூரிகளில், 79 கல்லூரிகள் நிகர்நிலைப் பலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்ததாகவும்,  மாணவர்கள் சேர்க்கையின்றி கல்லூரிகள் மூடப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.