சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை அதிரடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். 1212 ஒப்பந்த செவிலியர்கள்  பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி,  தற்போதைய கொரோனா காலக்கட்டத்தை கருத்தில்கொண்டு முதல் உத்தரவாக செவிலியர்கள் பணி நியமனம் செய்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. திமுக 125 இடங்களை தனித்து கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது.  இதையடுத்து, தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி அமைக்கபோகும் திமுகவுக்கு பெரும் சவாலாக, நாட்டையே உலுக்கி வரும் கொரோனா இரண்டாம் அலை இருக்கிறது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பானது 20ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரதுறைச் செயலாளர் உள்ளிட்ட பிற அதிகாரிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.

இதைத்தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிவிக்கையில் தெரிவித்திருந்தபடி, முதல் உத்தரவாக  1212 தற்காலிக ஒப்பந்த முறை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

திமுக தேர்தல் அறிக்கையின் 356வது பகுதியான அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்கள் உடடினயாக நிரப்பபப்படுவதோ, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது.

அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். திமுக தலைவர் முதல்வராக பதவி ஏற்கும் முன்பே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரதுறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன்.

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சென்னையில் ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்ககளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.