சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது  என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை  கட்டுப்படுத்த  மத்திய மாநில அரசுகள்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் நேற்று (ஜன.8) திங்கட்கிழமை புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த ஜெ.என் 1 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்பின் போது தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது எனஅறிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் இணை நோய் இருந்தால், கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என  அறிவித்துள்ளது.

 கடந்த 7ந்தேதி நிலவரப்படி,  தமிழகத்தில் 626 பேருக்குப் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம், 20 பேருக்கு  தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும்,  தொற்றால் பாதிக்கப்பட்ட 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுமட்டும் அல்லாது, தமிழகத்தில் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 8 ஆயிரத்து‌ 336 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண், பெண் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் என மொத்தமாக 36 லட்சத்து 11 ஆயிரத்து‌ 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 10 பேர், கோவையில் 5 பேர், திருச்சியில் 2 பேர், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் தலா ஒருவர் என 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26 பேர் இன்று (ஜன.07) டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 8ந்தேதி) புதிதாக  மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நேற்று 256 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், சென்னை மாவட்டத்தில் 8 பேருக்கும், கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது.

இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.