காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த சாலைமறியல் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர், தங்கும் விடுதியில் தரமற்ற உணவு விநியோகம் செய்ததாகப் புகார் கூறி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி, நீண்ட நேரம் பெண் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் கணேசன், பெண் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், பெண் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதாகவும் அறிவித்தார். இதையடுத்து 16 மணி நேரமாக நடந்து வந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகத் தொழிலாளர்கள் அறிவித்தனர். போராட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை- பெங்களூரு சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.