டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும்  ஒமிக்ரானும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா மற்றும் ஒமிக்ரான பாதிப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 442 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,60,70,510 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்வு.

கொரோனா பாதிப்பு  நேற்றைய பாதிப்பை விட கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  24,000 பேர் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,60,70,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு  4,84,655 பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,46,30,536 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்கு 9,55,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 1,53,80,08,200 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1,805 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1281 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 499 பேர் குணமடைந்துள்ளனர்.

 2வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் தொடர்கிறது. அங்கு 645 பேர் பாதிக்கப்பட்டு, 402 பேர் குணமடைந்துள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 7வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 185 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் குணமடைந்துவிட்டனர்.