சென்னை; தமிழ்நாட்டில் ரூ.336 கோடி மதிப்பில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், சாலைகள் போடும் பணி மற்றும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் புதிய பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, 335 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் ரூ.336 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் ஈரோடு, கரூர், மதுரை, சேலம், ஆகிய இடங்களில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. தரமான பொருட்களை கொண்டு பாலம் கட்டப்படுவதை ஆய்வு செய்து உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
வடசென்னை மக்களுக்கு விடிவு: சென்னையில் மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி…