மதுரை: திருச்சி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணியால் தமிழகத்தில் 11 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிக்காக தற்காலிகமாக 11 ரயில்கள் சில நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி,

திருச்சி – திருவனந்தபுரம் இடையேயான திருச்சி சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

நெல்லை சிறப்பு ரயில் மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகர்கோவில் – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை பெங்களூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் விருதுநகர் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது .

பெங்களூர் சிறப்பு ரயில் , நாகர்கோவில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது .

பிப்ரவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் , நாகர்கோவில் – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது .

நெல்லை , கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி , கடம்பூர் ரயில்பாதை பிரிவுகளில், இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.