கால்வாயில் இருந்து 12 உடல்கள் மீட்பு: ஹரியானாவில் அதிர்ச்சி

Must read

ஜின்ட்,

ரியானாவில் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் 12 உடல்களும், 4 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டது. இது அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியான மாநிலத்தில் ஜின்ட் மாவட்டம் நர்வனா பகுதியில் பக்ரானங்கல் அணையின் கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்த வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு, பொக்லைன் வாகனங்கள் மூலம் கால்வாயில் படிந்துள்ள சேரும், சகதியும் அள்ளப்பட்டது.

அப்போது பொக்லைன்மூலம் அள்ளப்பட்ட சேருடன் மணி உடல்களும் அழுகிய நிலையில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் சேருகளை வாரும்போது தொடர்ந்து 12 உடல்கள் அழுகிய நிலையில் கண்டு எடுக்கப்பட்டது. மேலும் 4 மண்டை ஓடுகளும் கால்வாயில் இருந்து எடுக்கப்பட்டன.

கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட உடல்கள் சுமார் 10 மாதத்திற்குள் முன்பு கால்வாயில் அடித்து வரப்பட்ட உடல்களாக இருக்கலாம் என்றும், இது ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தின்போது பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலே பிரதேச பகுதிகளில் இருந்து அடித்துவரப்பட்ட உடல்களாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பகுதி பஞ்சாப் மாநில எல்லை பகுதியாதலால், இரு மாநில போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறு உடல்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றனவா  என்று போலீசார், கால்வாய் முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட 12 உடல்களில் ஒன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருடையது என்று பஞ்சாப் போலீசார் உறுதி செய்துள்ளனர். மற்ற உடல்களும் யாருடையது என விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கால்வாய் நங்கல், உனா, தல்வாரா, நலஹார், அனந்பூர், கிரட்பூர், பரத்கார், ரோபர், மொரின்டா, படேகார் சாகிப், சார்ஹிட், சமானா, காகா, கனாரி, நர்வான வழியாக சென்று இறுதியில் ஹிசார் பகுதியில் நிறைவுபெறுகிறது.

கால்வாயில் உடல்கள்  கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article