சென்னை: தமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று 30 பேருக்கு பாதிப்பு உறுதியான  நிலையில் இன்று 28ஆக குறைந்துள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, தமிழகம் முழுவதும் 229 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 27 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 858 பேராக அதிகரித்துள்ளது.

இன்று 17,195  மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 6 கோடியே 46 லட்சத்து 59 ஆயிரத்து 158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.