சென்னை,

ன்று வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில் தமிழகம் முழுவதும் இருந்த தேர்வு எழுதிய கைதிகளில் 203 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை  10 மணிக்கு வெளியானது. இந்த ஆண்டு 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வை எழுதியுள்ள சுமார்  10 லட்சத்து 38 ஆயிரம்  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளளனர்.   தேர்ச்சி விகிதத்தில் 96.2 சதவிகிதம் மாணவியரும், 94.4 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர்.

இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர்.

இவர்களுடன் பல்வேறு வழக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 228 கைதிகளும் தேர்வை எதிர்கொண்டனர்.

இவர்களில் பெண்கள் உள்பட  203 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கைதிகளில் அபுபக்கர் என்ற ஆயுள் தண்டனை கைதி 422 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அதையடுத்து நீலகண்டன் என்ற கைதி 415 மதிப்பெண்ணும், செந்தில் முரகன் என்ற கைதி 411 மதிப்பெண்ணும் பெறும் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களுக்கு  சிறை கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.