த்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னை மாநகராட்சியை சேர்ந்த சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான புவனேஷ்வரி மற்றும் அனிதா 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதே பள்ளியை சேர்ந்த மாணவி மஸ்வின் ரோஷன் 489 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். பெரம்பூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்தியா 488 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
corporation_toppers
சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 95 சதவீத தேர்ச்சியினை பெற்றிருப்பதாகவும், முன் எப்போதும் இல்லாத தேர்ச்சி விகிதம் இது என்றும் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறினார். . சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சிப் பள்ளிகளில் அதிகபட்சமாக 492 மதிப்பெண்களை இருவர் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.