பெங்களூரு:  சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1  விண்கலம் இன்று முற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதை நேரில் காண  10ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக  சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து  இன்று முற்பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

அதற்கான  24  மணி நேர கவுன்ட்டவுன்  நேற்று பகல் 12.10 மணிக்கு தொடங்கியது.இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, விண்கலம் விண்ணில் ஏவுவதை நேரில் காண, இஸ்ரோ பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கான இணையதள முகவரியை வெளியிட்டு, ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண முன்பதிவு செய்யலாம் என்று கடந்த ஆகஸ்டு மாதம் 29ந்தேதி  இஸ்ரோ அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலத்தைக் காண 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.