பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவால்  முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம்  இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பறக்கிறது. அதற்கான கவுண்டவுன் நடைபெற்று வருகிறது.

சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா L-1 என்ற விண்கலம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த சில ஆண்டுகளாக தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட அனைத்து சோதனைகளையும் முடிவடைந்த நிலையில்,  இன்று காலை (செப்டம்பர் 2ந்தேதி, 2023)  11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி தளத்தில்  விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.  இன்று விண்ணில் ஏவப்படும்  ஆதித்யா எல்1  செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இது, சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இடைவெளி இன்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக அனுப்பி வைக்கப்படும்.

சூரியன் குறித்த ஆய்வுக்காக  இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து மட்டுமே இதுவரை விண்கலங்களை அனுப்பியுள்ள நிலையில் இந்தியாவும் சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை இன்று அனுப்புகிறது.  இதுவரை   சூரியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் செயற்கைக்கோளை விட ஆதித்யா செயற்கைக்கோள் அதிக தரவுகளை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது. அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், ஏற்கனவே திட்டமிட்டு அறிவித்தபடி, சூரியனை ஆராய ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம்  இன்று  விண்ணில் பறக்க உள்ளது.