நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியாக உள்ளது.

ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு சீட் அனுமனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்த பிரபாஸ் தெலுங்கு திரையுலகைத் தாண்டி இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளார்.

தன்ஹாஜி என்ற இந்தி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார் இவருடன் இனைந்து பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானும் நடித்துள்ளார் .

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2022-ல் வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்தப் படம் ஜூன் மாதம் 16 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் ராமாயணம் பாராயணம் செய்யும் இடத்தில் எல்லாம் அனுமன் தோன்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஆதிபுருஷ் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு சீட் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.