டெல்லி: 9 மாதங்களில் 100 கோடிபேருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை செய்ததற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை நிதிஆயோக் தலைவர் டாக்டர் வி.கே.பால் வாழ்த்தியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், இதுவரை 100 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி, இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை தடுப்பூசி போடும் பணி தொடங்கி 9 மாதங்களில் நிகழ்த்தப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று அழித்தொழிக்கும் வகையில் அயராது பாடுபட்டு உழைத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறையிருக்கு பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நிதிஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் டாக்ர் வி.கே.பால், மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்திய மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய 9 மாதங்களில் சாதனை 1 பில்லியன் டோஸ் செலுத்தி சாதனை செய்துள்ளது. சாதனையாளர்களான மருத்துவ பணியாளர்களை வாழ்த்துக்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அக்டோபர் 21 நடைபெற்ற FICCI இன் “ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ், உலகளாவிய மருத்துவ சாதனங்கள் சந்தையில் இந்தியா முன்னணியில் உள்ள நாடு என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்திருந்தார். ஆனால், கோவிட் -19 முன்வைத்த சவால்களுக்கு மத்தியில் 9 மாதங்களில் இந்தியா இந்த வெற்றியை பெற்றுள்ளது.
நாட்டில் 99 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் நாடு முழுவதும் வயது வந்தோருக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி – வாழ்த்து: 100கோடி கோவிட் தடுப்பூசி என்ற புதிய மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை…