டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  18,454 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன; தற்போது சிகிச்சையில் 1,78,831 பேர் உள்ளனர். அதே வேளையில்  மீட்பு விகிதம்  98.15% ஆக உயர்ந்துள்ளது. இது  மார்ச் 2020 முதல் அதிகபட்சம் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி (இன்று காலை 8 மணி வரையிலான நிலவரம்) கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  18,454 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,27,450 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் மேலும்  160 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,52,811ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் சிகிச்சையில் இருந்து 17,561 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,34,95,808 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,78,831 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,08,665 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 99,85,38,075 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.