விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில்,தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமான சோதனைச் சாவடிகளைத் தாண்டி கூடுதலாக, சந்தேகத்திற்குரிய இடங்களில் திடீர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணமின்றி ஒப்பந்ததாரர் பாலசுப்ரமணியம் என்பவரின் காரில் எடுத்து சென்ற பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.