புதுடெல்லி:

யார் ஆட்சிக்கு வந்தாலும்,   10 தலையாய பிரச்சினைகளை இந்தியா சந்தித்தே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுப்பாடும், நாட்டில் படிப்படியான பொருளதார வளர்ச்சியும் ஆட்சி மாற்றத்தின் காரணிகளாக இருந்தன.

எனினும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி அடைந்திப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் பாஜகவும், காங்கிரஸும் வங்கியில் நேரடியாக பணம் போடுவதாக வாக்குறுதி அளித்தன.
இதிலிருந்து இந்தியா பரம ஏழை நாடாகவே இருக்கிறது என்பதையே பிரதிபலிக்கிறது.

அடுத்த முக்கிய பிரச்சினை விவசாயம். கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிப்பிழப்பு நடவடிக்கை பாதிப்படையச் செய்துள்ளது.

இதனால் பல விவசாயிகள் கடனாளியாகிவிட்டார்கள். இதனை அடைப்பதற்கு அவர்களுக்கு வழி தெரியவில்லை.

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் இறக்கின்றனர்.
2020-ம் ஆண்டுக்குள் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும்.

75% வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காது. இந்தியாவில் 70% தண்ணீர் அசுத்தமாகிவிடும்.

இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு அளித்தாலும், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது.
உடல் நலம் பேணுதல் இந்தியாவில் பெரும் தலைவலியாகவே உள்ளது.

உலகிலேயே குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பல்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை அரசு அறிவித்தாலும், அவை மருத்துவத்துக்கு அதிக பணத்தை செலவு செய்யவே வழி வகுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, கல்வி, திறன் பயிற்சி, வேலை கிடைப்பது இளைஞர்களுக்கு சவாலாக உள்ளது.

இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பெரிய பொறுப்பு அடுத்து ஆட்சியமைக்கும் பாஜகவுக்கு உள்ளது.

பாலின பாகுபாடும் இந்தியாவில் சவாலாக உள்ளது. மீ டு இயக்கம் தீவிரமடைந்தபோது, பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு இறங்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலையில் மாற்றம் வரப்போவதில்லை என்பதே பரவலான கருத்தாக உள்ளது.