சென்னை:
ட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டீ. உள்பட ஒரு டன்னுக்கு ரூ.1,180 குறைக்கப்பட்டு உள்ளது.

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தி இருந்தது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாககட்டுமானத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான கூலி தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்நிலையில், சிமென்ட், இரும்புக் கம்பி விலை கடுமையாக உயா்த்தப்பட்டிருப்பது, தற்போது வீடு கட்டும் பணியை தொடங்கியிருக்கும் சாமானிய மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சிமென்ட் மற்றும் கம்பி விலை, பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்த விலையிலேயே தொடா்கிறது.

இதனால், தமிழகத்தில் சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பி உற்பத்தியாளா்கள் கூட்டு சோ்ந்து உற்பத்தியை குறைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயா்த்தி இருப்பதாக, மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பி ஆகியவற்றை நியாயமான விலையில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டீ. உள்பட ஒரு டன்னுக்கு ரூ.1,180 குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.