10/06/2021: சென்னையில் கொரோனா – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்…

Must read

சென்னை: தமிழ்நாட்டில்  தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 321 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 31 ஆயிரத்து 253 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 258 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 332 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து 17 ஆயிரத்து 319 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 17 ஆயிரத்து 321 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 85 லட்சத்து 19 ஆயிரத்து 161 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 22 லட்சத்து 92 ஆயிரத்து 25 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இவர்களின் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தி மையங்களில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 258 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 31 ஆயிரத்து 253 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 169 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 236 நோயாளிகளும் என 405 பேர் மேலும் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 170 என உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 345 எனப் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூரில் இரண்டாயிரத்து 319 நபர்களும், ஈரோட்டில் ஆயிரத்து 405 நபர்களும் என வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது.

 சென்னையில்  இதுவரை சென்னையில் 5,20,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  52 பேர் உயிர் இழந்துள்ளார். இதுவரை 7,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில்  3,281 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,97,586 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 14,678 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இதுவரை  21,46.,585 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது. நேற்று மட்டும் 7,999 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிப்பு

 

More articles

Latest article